பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக காலாப்பட்டில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக காலாப்பட்டில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2020-02-28 23:46 GMT
புதுச்சேரி,

புதுவை காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட கல்விக்கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துணை ஜனாதிபதி வருகையையொட்டி பல்கலைக்கழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் கடந்த 26-ந்தேதி போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதை கண்டித்தும், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாணவர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியை சேர்ந்த அனைத்து கட்சி சார்பில் நேற்று காலை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2-வது நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத பல்கலைக்கழகத் துக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.

மேலும் செய்திகள்