திருவையாறு அருகே வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் சாவு

திருவையாறு அருகே வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2020-02-28 22:09 GMT
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் பூபதிஅப்பு(வயது25). இவர் சொந்தமாக வைக்கோல் கட்டும் எந்திரம் வைத்துள்ளார். சம்பவத்தன்று கீழத்திருப்பூந்துருத்தி அய்யனார் கோவில் அருகே கோரை வாய்கால் பக்கத்தில் உள்ள ஜான் என்பவர் வயலில் எந்திரம் மூலம் அறுவடை நடைபெற்றது. அறுவடையின் போது வைக்கோலை எந்திரம் மூலம் கட்டும் பணியில் பூபதிஅப்பு ஈடுபட்டார். அப்போது எந்திரத்தில் சிக்கிய சனலை பூபதிஅப்பு எடுத்த போது எதிர்பாராதவிதமாக கை எந்திரத்தில் சிக்கி நசுங்கியது.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பூபதிஅப்பு இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பூபதிஅப்பு தந்தை ரவி நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வைக்கோல் கட்டும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் இறந்த சம்பவம் மேலத்திருப்பூந்துருத்தி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்