ஒரகடம் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் கைது
ஒரகடம் அருகே கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர் கிராமம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன்( வயது 45) இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது சொந்த உபயோகத்திற்காக கார் ஒன்றை வாங்கி பயன்படுத்தினார். அதே ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூரில் டிராவல்ஸ் நடத்தி வரும் வி.ஆர்.பி சத்திரத்தை சேர்ந்த முருகன் என்கிற ஸ்டாலின், (31) என்பவர் லட்சுமணனை அணுகி கம்பெனிகளுக்கு காரை வாடகைக்கு விட்டால் மாதம் தோறும் ரூ.21 ஆயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பி லட்சுமணன் தனது காரை முருகனிடம் ஒப்படைத்துள்ளார். மாதம் தோறும் ரூ.21 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தையின் பேரில் காரை முருகன் எடுத்து சென்றார்.
இந்த நிலையில் வாடகை பணத்தை தராததால் முருகனை நேரில் சந்தித்து பணம் குறித்து லட்சுமணன் கேட்டார். முருகன் சரியான பதில் கூறவில்லை. நேற்று முன்தினம் லட்சுமணன் முருகன் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிக்கு அவரிடம் காரை வாடகைக்கு விட்டு ஏமாந்த சிலருடன் சென்றார். முருகனிடம் காரை பற்றியும் தங்களுக்கு சேர வேண்டிய பணத்தையும் கேட்டுள்ளனர். அப்போது முருகன் அவர்களை தரக்குறைவாக பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லட்சுமணனை வெட்டினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டியதில் அங்கிருந்து அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயம் அடைந்த லட்சுமணன் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 கார்கள் கைப்பற்றப்பட்டது.