கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம் ஆகும்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.15 லட்சம் ஆகும்.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் எண்ணப்பட்டது. தொடர்ந்து 8 மாதங்களுக்கு பிறகு கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் முன் மண்டபத்தில் நேற்று நடந்தது. கோவில் நிர்வாக அலுவலர் (பொறுப்பு) சிவகலை பிரியா தலைமை தாங்கினார்.
கோவில் ஆய்வாளர் சரவணகுமார், தக்காரின் பிரதிநிதி செந்தில் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் ஊழியர்கள், பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.15 லட்சம்
கோவிலில் உள்ள 16 நிரந்தர உண்டியல்கள் மற்றும் சுந்தரராஜ பெருமாள் கோவில், தெப்பக்குள விநாயகர் கோவில், மார்க்கெட் ரோடு முருகன் கோவில் ஆகியவற்றில் தலா ஒரு உண்டியல் என மொத்தம் 19 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
இதில் மொத்தம் ரூ.15 லட்சத்து 18 ஆயிரத்து 258–யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 133 கிராமும், வெள்ளி பொருட்கள் 579 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.