ராணிப்பேட்டையில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஊர்வலம்
ராணிப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் விஜயன் தலைமை தாங்கினார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக ராணிப்பேட்டை சந்தை பகுதிக்கு வந்தது. அங்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினர்.
பின்னர் 7 பேர் அடங்கிய குழுவினர் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினியை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மனு கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் 250–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.