ஆத்தூர் அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆத்தூர் அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-28 22:00 GMT
ஆறுமுகநேரி, 

ஆத்தூர் அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்புலன்ஸ் டிரைவர் 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே கீரனூரைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவருடைய மகன் முத்துகுமார் (வயது 30). இவர் பழையகாயலில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி இன்பி (23). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு முகிஷா (1) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

தற்கொலை 

இதனால் மனமுடைந்த முத்துகுமார் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தொங்கினார். அப்போது அங்கு வந்த மனைவி இன்பி, இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்