இன்னும் மோடி அலை வீசுகிறது காங்கிரஸ் தலைவர் சுஷில்குமார் ஷிண்டே பேச்சு

இன்னும் மோடி அலை வீசுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சுஷில்குமார் ஷிண்டே பேசினார்.

Update: 2020-02-27 23:19 GMT
மும்பை,

சோலாப்பூரில் நேற்று காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சுஷில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாரதீய ஜனதாவின் முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனாவை மராட்டியத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

நாங்கள் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்து இருக்கிறோம்.

இது ஒரு ஆரம்பம் தான். சிறிய அளவில் இன்னும் மோடி அலை வீசுகிறது என்பதை நான் அறிவேன். அவர் எங்களை வசியம் செய்தார். என்னையும் வசியம் செய்தார். முதல் 2 ஆண்டுகளில், மோடி சிறப்பாக செயல்படுகிறார் என்று நானும் கூறினேன். ஆனால் பின்னர் பொருளாதார நிலைமை மோசமடைய தொடங்கியது. வேலைவாய்ப்பு குறித்த தவறான கூற்றுகள் அம்பலப்படுத்தப்பட்டன. மத அடிப்படையிலான முடிவுகளால் சமூகங்களிடையே பிளவு உருவாகி நாட்டின் நிலைமை மோசமடைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்