தொடக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ள தடுப்பூசி தொழிற்சாலையை காப்பாற்ற வேண்டும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. வேண்டுகோள்
தொடக்க நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ள தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை காப்பாற்ற வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் திருமணி கிராமத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசின் எச்.பி.எல் நிறுவனம் மூலம் மிகப்பெரிய உயிர்காக்கும் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. நமது நாட்டின் தடுப்பூசி தேவையில் 75 சதவீதம் எச்.பி.எல். நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலையில் வாங்கி கொள்ளப்படும் என ஒப்பந்தம் உள்ளது.
100 ஏக்கர் பரப்பளவில் தடுப்பூசி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இதில், திரவ பென்டாவலண்ட் தடுப்பூசி, தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, ஜப்பானிய என்செபாலிடிஸ் மின் தடுப்பூசி, பி.சி.ஜி தடுப்பூசி உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டு அதற்கான ஆய்வு தளவாடங்கள் அனைத்தும் நிறுவப்பட்டு தடுப்பூசிகள் தாயாரிக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது.
இந்த பணிகளில் பயோ டெக்னாலாஜி படித்த வல்லுனர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவு ரூ.594 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதமானாதால், 2019-ம் ஆண்டில் ரூ.904.33 கோடியாக அதிகரித்தது. மீண்டும் திருத்தப்பட்ட ரூ.904.33 கோடியாக திட்ட செலவு விரிவாக்க அறிக்கையை 2018-ம் ஆண்டு சமர்பித்தது. ஆனால், நிதி அமைச்சகம் நிதி ஒதுக்காமல் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கண்ட நிர்வாகம் நிதி பற்றாக்குறையுடன் செயல்பட முடியாது என தெரிவித்துள்ளது. இதனால், நிறுவனத்தில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உள்ளது. மேலும் பல ஊழியர்கள் வேறு இடங்களுக்கு கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், எம.பி.யுமான டிகே.ரங்கராஜன் நேற்று தடுப்பூசி தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த பணியாளர்கள் அவரிடம் கூறியதாவது:-
தடுப்பூசி தயாரிப்பதற்கான அனைத்து கட்டமைப்புகளும் உள்ளது. தடுப்பூசிகளை ஆராய்ச்சி முறையில் தயாரித்து மேம்படுத்துவதற்காக சோதனையில் வெற்றி பெற்றுள்ளோம். இருப்பினும் தொழிற்சாலையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக, காலதாமதம் என்ற தவறான தகவல்களை மத்திய அரசு அளித்து வருவதுடன் பணியாளர்களை கட்டாயமாக பணியிட மாற்றம் செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் டிகே.ரங்கராஜன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. மத்திய அரசு நிதிஆயோக் சுகாதாரத்துறை, பிரதமர் அலுவலகம் இந்நிறுவனத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த வாரம் டெல்லி செல்லும்போது இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை துறை சார்ந்த அலுவலர்களிடம் வலியுறுத்த இருக்கிறேன். தமிழக அரசு சுகாதாரத்துறை இந்த நிறுவனத்தை பாதுகாப்பது என்பது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாகும். இந்த தொழிற்சாலையை காப்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை மனுவை டிகே.ரங்கராஜனிடம் கொடுத்தனர்.
இந்த ஆய்வின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சங்கர், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், எஸ்.கண்ணன், பிரமிளா மற்றும் பலர் உடன் இருந்தனர்.