ஆற்காட்டில், நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ; அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் நோக்கில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) ஆற்காட்டில் உள்ள எஸ்.எஸ்.எஸ்.கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
முகாமில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் 100–க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்க உள்ளனர்.
முகாமில் 8–ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, பட்டய படிப்புகள், பொறியியல், எம்.பி.ஏ, நர்சிங் படிப்புகள் உள்ளிட்ட கல்வித்தகுதிகளை உடையவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.