மதுபானத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்; கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தனர்

ராணிப்பேட்டையில் நேற்று மதுபானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2020-02-27 22:30 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஊர்வலம் முத்துக்கடை பகுதியில் தொடங்கி கிருஷ்ணகிரி டிரங்க் ரோடு, ரெயில்வே ஸ்டே‌ஷன் சாலை, எம்.எப்.ரோடு, எம்.பி.டி.ரோடு, நவல்பூர் வழியாக மீண்டும் முத்துக்கடையை அடைந்தது. ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் சென்ற மாணவ, மாணவிகள், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த பதாகைகளை ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்கள் வினியோகித்தவாறும் சென்றனர்.

இதில் உதவி ஆணையர் (கலால்) தாரகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்