பட்டமளிப்பு விழாவுக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு

புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2020-02-26 23:44 GMT
புதுச்சேரி,

புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுவை விமான நிலையம் வந்தார்.

விமான நிலையத்தில் அவரை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜான்குமார், சிவா, வெங்கடேசன், அன்பழகன், அசனா, சாமிநாதன், சங்கர், செல்வகணபதி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி களின் நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

போலீஸ் மரியாதை

போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட வெங்கையா நாயுடு அங்கிருந்து காரில் பல்கலைக்கழகம் வந்தார். அங்கு நடந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழா முடிந்ததும் மீண்டும் விமான நிலையத்துக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஹெலிகாப்டர் மூலம் சென்னை சென்றார். அவரை கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

கடுமையான சோதனை

புதுவை பல்கலைக்கழக கல்விக்கட்டண உயர்வினை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பட்ட மளிப்பு விழாவில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பட்டமளிப்பு விழாவுக்கு வந்த மாணவ, மாணவிகள் கடுமையான சோதனைக்கு பின்னரே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்