கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை திரளானவர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கி உள்ளது. இதனையொட்டி நடந்த சாம்பல் புதன் பிரார்த்தனையில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
நாகர்கோவில்,
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைக்கு முன்னதாக இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் விதமாக 40 நாட்களுக்கு மேலாக நோன்பு இருப்பது வழக்கம். இந்த நோன்பு காலத்தை கிறிஸ்தவர்களால் தவக்காலம் என்று அழைக்கப்படுகிறது. தவக்காலமானது சாம்பல் புதன் அன்று தொடங்கும்.
இந்த ஆண்டுக்கான சாம்பல் புதனான நேற்று கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் கடந்த ஆண்டு குருத்தோலை தினத்தன்று வழங்கப்பட்ட குருத்தோலைகளை தீயில் எரித்து அதில் கிடைத்த சாம்பலை கொண்டு கிறிஸ்தவர்களின் நெற்றியில் அருட்பணியாளர்களும், அருட்சகோதரிகளும் சிலுவை அடையாளமிட்டனர்.
ஆயர் நசரேன் சூசை
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் பிரார்த்தனையில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டார். பின்னர் பிரார்த்தனைக்காக வந்திருந்த திராளான கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டார்.
இதே போல காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், நுள்ளிவிளை கார்மல் அன்னை ஆலயம், கொன்னக்குழிவிளை வியாகுல அன்னை ஆலயம், சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தலம், மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம், கண்டன்விளை புனித குழந்தை தெரசா ஆலயம், தக்கலை புனித எலியாஸ் ஆலயம், முளகுமூடு புனித மரியன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் சாம்பல் புதன் பிரார்த்தனை நடந்தது.
புனித வெள்ளி
தவக்காலத்தின் இறுதி வாரத்தில் பெரிய வியாழக்கிழமை அன்று, இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவியதின் நினைவாக ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு புனித வெள்ளி அன்று இயேசுவின் சிலுவைபாடுகளை நினைவு கூறும் விதமாக மும்மணி ஆராதனை, சிலுவைப்பாடு ஆராதனை ஆகியவை நடைபெற உள்ளன.