ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது - குமரகுரு எம்.எல்.ஏ. பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற ஜெய லலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் குமரகுரு எம்.எல்.ஏ. பேசினார்.;
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரை அடுத்த கண்டாச்சிபுரத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சங்க தலைவர் ஏழுமலை, கிளை செயலாளர் ராஜேந்திரன், துரை, ஊராட்சி செயலாளர் சிவாலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், கைத்தறி சங்க தலைவர் கார்த்திகேயன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் இயக்குனர் கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகையூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான தனபால்ராஜ் வரவேற்றார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளரும், பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான மாரங்கியூர் எம்.இளங்கோவன் தொடக்க உரையாற்றினார். விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான குமரகுரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களை ஈடேற்றி வருவதால் 3 ஆண்டுகளை கடந்து 4-வது ஆண்டாக வெற்றி நடைபோடுகிறது. அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து தேசிய அளவில் முதன்மை பெற்று விளங்குவதால் மத்திய அரசால் ஆளுமை மிகுந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் அ.தி.மு.க ஆட்சியில்தான் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஒரே ஆண்டில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கி சாதனை படைத்ததுடன், 11 மருத்துவ கல்லூரிகளுக்கும் அனுமதிபெற்று சாதனை படைத்துள்ளார். காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்டியவர் ஜெயலலிதா. அதை தொடர்ந்து தற்போது வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளின் பாதுகாவலனாக முதல்-அமைச்சர் திகழ்ந்துவருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் 65 சதவீத வெற்றி பெற்ற நாம், இந்த முறை நடக்கப்போகும் உள்ளாட்சி தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீத வெற்றி பெற போகிறோம். அதற்கு இப்போதே தேர்தல் பணியை தொடங்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை ராஜசேகரன், மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் எஸ்.பழனிச்சாமி, மாவட்ட அறங்காவலர்குழு தலைவரும், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான ஏ.சந்தோஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சீனுவாசன், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.தமிழரசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் சீனுவாசன், சிவாலிங்கம், அந்தோணிபெர்லின், கார்த்திகேயன், மாவட்ட பாசறை தலைவர் சபரீசன், பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதாவேல்முருகன், தெய்வசிகாமணி, கிளை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜெய்சங்கர், ரகோத்துமன், சிவசங்கர், சின்னராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிவகங்கை கருணாநிதி நன்றி கூறினார்.