ராமநாதபுரம் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு மானாமதுரையில் சிறப்பான வரவேற்பு - அமைச்சர் பாஸ்கரன் தகவல்

ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மானாமதுரையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Update: 2020-02-26 22:30 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் யூனியன் தட்டான்குளம் வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கருவேல மரங்களை அதற்றும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் இந்த பணிகளை அமைச்சர் பாஸ்கரன் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் வைகை ஆற்றுப்பகுதியில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்த பணிக்காக 20 பொக் லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட உள்ளது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மூலம் நமது மாவட்டம் பயன் பெறும்.

வருகிற 1-ந்தேதி ராமநாதபுரம் செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மானாமதுரையில் விவசாயிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இ்வ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது கலெக்டர் ஜெயகாந்தன், எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் அரசியல் கட்சியினர், வைகை பாசன விவசாய சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்.

இதனை தொடர்ந்து மானாமதுரை வைகை ஆற்றுப்படுகையில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன், நாகராஜன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், வட்டாரவளர்ச்சி அதிகாரிகள் சுந்தரமகாலிங்கம், அழகுமீனா, தாசில்தார் பஞ்பிகேசன், சின்னகண்ணனூர் ஊராட்சி கழக செயலாளர் வேலுச்சாமி, நாகு நரசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்