திருச்சி கண்டோன்மெண்ட் முத்துமாரியம்மன் கோவில் தேர் வீதியுலா
திருச்சி கண்டோன்மெண்ட் முத்துமாரியம்மன் கோவில் தேர் வீதியுலா.
திருச்சி,
திருச்சி கண்டோன்மெண்ட் கான்வென்ட் ரோட்டில் உள்ள ராஜகணபதி, மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்துமாரியம்மன் கோவிலின் 43-ம் ஆண்டு திருவிழா கடந்த 11-ந் தேதி முதல் மஞ்சள் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 2-வது காப்பு கட்டுதல் கடந்த 18-ந் தேதி நடந்தது. அதையொட்டி, தினமும் சுவாமிகளுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த நிலையில் முக்கிய விழாவான முத்துமாரியம்மன் தேர் வீதியுலா நேற்று இரவு நடந்தது. இரவு 9.30 மணிக்கு அம்மன் திருத்தேர் கோவிலை விட்டு புறப்பட்டு கோர்ட்டு அருகில் உள்ள செட்டித்துறை பாலம் சர்பநதி கங்கையில் இருந்து மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அங்கிருந்து முத்துமாரியம்மன் தேர் வீதியுலா புறப்பட்டது. அதற்கு முன்பாக காவல் தெய்வமான மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் செல்ல, அதிர்வேட்டுகள் முழங்கவும், மங்கள இசையுடனும் சென்றது. முத்துமாரியம்மன் தேர் வீதியுலாவானது பாரதிதாசன் சாலை, பிராமினேட் ரோடு, மதுரை ரோடு, மேலப்புதூர், கான்வென்ட் ரோடு வழியாக கோவிலை சென்றடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிலர் அருள் வந்து ஆடினர். இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நாதஸ்வர மங்கள இசையும், மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்பாள் அழைப்பு மற்றும் கூழ்வார்த்தல் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, ஒத்தக்கடை மந்தையில் குட்டி குடித்தல் விழா நடக்கிறது. 28-ந் தேதி மதியம் அன்னதானமும், 29-ந் தேதி மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், காவிரி ஆறு அய்யாளம்மன் படித்துறை பூ விடும் விழாவும், இரவு 7 மணிக்கு விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் ஜெயராஜ் அடிகள் மற்றும் கோவில் விழா கமிட்டியார் செய்து வருகிறார்கள்.