ஆலப்பாக்கம் ஊராட்சியில் மதுபான ஆலை கழிவுகளால் பாதிப்புக்குள்ளாவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
மதுபான ஆலை கழிவுகளால் பாதிப்புக்குள்ளாவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
செங்கல்பட்டு,
ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இருங்குன்றம் பள்ளி கிராம பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் கலெக்டர் ஜான் லூயிசை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் பஞ்சாயத்து இருங்குன்றம் பள்ளி கிராமத்தில் பல ஆண்டுளாக வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் விவசாயமும் வேலைவாய்ப்பும் இல்லை. ஏனெனில் எங்கள் ஊரில் பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலை இயங்கி வருகிறது இந்த ஆலையால் நாங்கள் பல பிரச்சினைக்குள்ளாகி உள்ளோம்.
சொந்த ஊரைவிட்டு வெளியே செல்லும் அளவுக்கு துன்பத்தை அடைந்துள்ளோம். இந்த மதுபான ஆலையில் இருந்து வரும் கழிவுநீர் குடிநீரில் கலந்து அதைசுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாதிப்படைந்துள்ளது.
பாலாற்றில் எங்கு தோண்டினாலும் சாயக்கழிவு நீராகவே மாறியுள்ளது தண்ணீரில் இருக்கும் நீர்நிலைகளிலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய்கள் வருகின்றன. ஆலையில் இருந்து வரும் நச்சுப் புகையால் கண் எரிச்சல் கண் மங்குதல் குழந்தையின்மை உடல் கோளாறு போன்றவை ஏற்படுகிறது. இதுகுறித்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகளும் இதனால் இறக்கின்றன. ஆகவே தாங்கள் எங்கள் கிராமத்தில் பிரச்சினைக்கு காரணமான மதுபான ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.