92 தொழிலாளர்கள் திடீர் நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு ; பாதிக்கப்பட்டோர் திரண்டதால் பரபரப்பு

ராணிப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் 92 தொழிலாளர்களை ஆட்குறைப்பு காரணமாக தொழிற்சாலை நிர்வாகம் திடீரென நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தாங்கள் அனைவரும் நீக்கப்பட்டதை கண்டித்து அதிர்ச்சியடைந்து அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-02-25 22:15 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிக அளவு தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பைபாஸ் சாலையில் உள்ள தோல் தொழிற்சாலையில் 92 பேர் வேலைவார்த்து வருகின்றனர். இவர்கள் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில் இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 92 பேரையும் ஆட்குறைப்பு செய்து நேற்று நிர்வாகம், தொழிற்சாலை முன்பு ஆட்குறைப்பு தொழிலாளர்களின் பெயர்பட்டியலை ஒட்டியது. காலை வேலைக்கு வந்தபோது 92 பேரும் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் அவர்கள் ஆலை முன் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் போராட்டத்துக்கு தயாராகிக்கொண் டிருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் ஏற்பட செய்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்