மெஞ்ஞானபுரம் அருகே பரிதாபம் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை நண்பர் பேசாததால் சோக முடிவு

மெஞ்ஞானபுரம் அருகே நண்பர் பேசாததால், பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-02-25 22:00 GMT
மெஞ்ஞானபுரம், 

மெஞ்ஞானபுரம் அருகே நண்பர் பேசாததால், பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி பெண் 

தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே கல்விளை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சாமுவேல். இவருடைய மனைவி தேவநேசம். இவர்களுக்கு 4 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். மூத்த மகள் அமுதா (வயது 29). இவர் பி.காம். படித்து உள்ளார். இந்த நிலையில் சாமுவேல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதற்கிடையே அமுதா அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்தார். அந்த வாலிபர், வெளியூரில் வேலை செய்து வருகிறார். இதனால் அவர்கள் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த வாலிபர், அமுதாவிடம் பேசவில்லை.

தற்கொலை 

இதனால் அமுதா மனமுடைந்த நிலையில் இருந்தார். இதனை அறிந்த தேவநேசம் தன்னுடைய மகள் அமுதாவிடம், அந்த வாலிபரை மறந்து விடு என்று அறிவுரை கூறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அமுதா தனது வீட்டில் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தேவநேசம் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கதவை உடைத்து அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர் பேசாததால், பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்