அரசியல் விழிப்புணர்வு பிரசாரம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

மராட்டியத்தில் அரசியல் விழிப்புணர்வு பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கி உள்ளது.

Update: 2020-02-24 23:51 GMT
மும்பை, 

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். டெல்லியில் தொடர்ந்து 3-ம் முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதன் மூலம் மராட்டியத்தில் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

இந்தநிலையில், மராட்டியத்தில் மக்கள் மத்தியில் ஆம் ஆத்மியை கொண்டு செல்லும் முயற்சியாக அரசியல் பணி என்ற பெயரில் விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று அக்கட்சி தொடங்கியது.

மார்ச் 23-ந் தேதி வரை...

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆம் ஆத்மியின் அரசியல் விழிப்புணர்வு பிரசாரம் மராட்டியத்தில் மார்ச் 23-ந் தேதி வரை நடைபெறும். இந்த பிரசாரத்தின் போது, டெல்லியை போல நாடு முழுவதும் உள்ள அரசியல், நிர்வாகம் மற்றும் மக்களை சுற்றி உள்ள பிரச்சினைகள் பற்றி பேசப்படும்.

மேலும் கெஜ்ரிவால் டெல்லியில் செயல்படுத்தி உள்ள திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த பிரசாரம் ஆத் ஆத்மி அரசாங்கத்தின் மூலம் டெல்லியில் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை மக்கள் புரிந்து கொள்ள இந்த பிரசாரம் உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்