ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
பரமக்குடி.
ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிரணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோரது ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. கொடி ஏற்றி, ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பரமக்குடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஓட்டப் பாலம் அருகே உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவப்படம் மணல் சிற்பத்தினால் அமைக்கப்பட்டு இருந்தது. அதற்கு சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார். ஐந்து முனைப்பகுதியில் நகர் அண்ணா தொழிற்சங்க தலைவர் பாண்டியன் ஏற்பாட்டில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
பஸ் நிலையம் அருகில் நகர் ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான் ஏற்பாட்டில் அ.தி.மு.க. கொடி ஏற்றி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் தினேஷ் ஏற்பாட்டில் குடும்ப பெண்களுக்கு ஹாட் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது. நகராட்சிக்குட்பட்ட 36- வது வார்டில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமி, மோகன், இளங்கோவன் ஆகியோரது ஏற்பாட்டில் அப்பகுதி மக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிகளில் பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், நகர் துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், மணிவாசகம், நகர் ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர்கள் திசை நாதன், திலகர், நில வள வங்கி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், வட்ட செயலாளர் அழகர், நகராட்சி முன்னாள் தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ் கண்ணன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சத்தீஸ்வரன், இளைஞர் பாசறை நகர் செயலாளர் செந்தில், நகர் மாணவரணி தலைவர் யோகமணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி ஒன்றியம் பார்த்திபனூரில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சந்தன மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்பு ஜெயலலிதா உருவப் படத்திற்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பள்ளி குழந்தைகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் பாதுஷா, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச் செயலாளர் தங்கவேல், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், பார்த்திபனூர் நகர் செயலாளர் வினோத், வக்கீல் வெங்கடேசன், அண்ணா தொழிற்சங்கநிர்வாகி முருகன், நகர் அவைத்தலைவர் மாணிக்கம், ஓட்டுனர் சங்க செயலாளர் சிவநேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.