சிவகங்கை அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே முனிக்கோவிலில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த களத்தூர் விலக்கில் அமைந்துள்ளது பாண்டியாபுரம் கண்மாய். இந்த பகுதியில் உள்ள முனிக்கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் கொல்லங்குடியைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும் தொல்லியல் ஆய்வாளருமான புலவர் காளிராசா அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது 131 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் கால கல்வெட்டு என்பது தெரிய வந்தது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது:-
சிவகங்கை பகுதியை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடமிருந்து தனிப்பகுதியாக பெற்று 1729-ம் ஆண்டிலிருந்து மன்னர் சசிவர்ணர் ஆண்டு வந்தார்.
சிவகங்கையின் கடைசி மன்னரான வேங்கை பெரிய உடையண ராஜாவிற்கு பிறகு 1801-ம் ஆண்டிலிருந்து ஜமீன்தார் ஆட்சிமுறை நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு ஆட்சி செய்த மகமு சுந்தர பாண்டியனால் இந்த கல்வெட்டு வெட்டிவைக்கப் பெற்றிருக்கலாம். சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் மகமு சுந்தர பாண்டியருக்கும் அவரது தாய் மகமு நாச்சியாருக்கும் சிலை உள்ளது. 350 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கட்டப்பெற்றதாக செய்தி உள்ளது.
இந்த கோவிலில் 13-ம் நூற்றாண்டின் கல்வெட்டுகள் இருப்பதை இந்திய தொல்லியல் துறையினர் பதிவு செய்துள்ளனர். 13-ம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுகள் சிவகங்கை அருங்காட்சியத்தில் வைக்கப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.