சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் பெண்கள் அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதால், பெண்கள் அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விவரம் வருமாறு:-
கேள்வி:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள் விழாவான இந்த நன்னாளில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டு இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசும் வலியுறுத்தியது. அந்த அடிப்படையில் தமிழகத்தைபொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பாக வாழக்கூடிய நகரம் கோவை என்றும், பெருநகரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரம் சென்னை என்றும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணி பாதுகாக்கப்பட்டு பெண்கள் அச்சம் இல்லாமல் இரவு நேரங்களில் கூட சாலைகளில் செல்லக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளோம். குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக நகரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பெருமளவில் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கேள்வி:- அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகை குறித்து என்ன கூறுகிறீர்கள்? அவருடன் விருந்தில் பங்கேற்கிறீர்களா?
பதில்: 2 தலைவர்களும் சந்தித்து முடிந்தபின்னர், அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தபின்னர்தான் முழு விவரமும் தெரியவரும். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கேள்வி:- குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்களே?
பதில்:- நான் ஏற்கனவே சட்டசபையில் தெளிவுப்படுத்தி உள்ளேன். வருவாய்த்துறை அமைச்சரும் சட்டசபையில் தெளிவாக எடுத்துச்சொல்லி உள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட தேவையில்லை. மத்திய அரசை பொறுத்தவரை மக்கள் தொகை கணக்கிட வேண்டும் என்றும் அதேபோல் என்.பி.ஆர். அதனுடன் எடுக்க வேண்டும் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது. என்.பி.ஆர். என்பதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது. 2003-ம் ஆண்டு தி.மு.க. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சியில் அங்கம் வகித்தபோதுதான் என்.பி.ஆர். என்ற இந்த சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு 2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அதனை இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருக்கின்றபோது முதன் முதலாக என்.பி.ஆர். கணக்கெடுப்பை அவர்கள்தான் தொடங்கி வைத்தனர். இன்று வேண்டும் என்றே அவர்கள் திட்டமிட்டு இந்த ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும், இடையூறு செய்ய வேண்டும் என்று கருதி அரசியல் லாபத்துக்காக, சிறுபான்மை மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.
என்.பி.ஆர்.ஐ பொறுத்தவரை ஏற்கனவே 2011-ம் ஆண்டு இருந்த 3 அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று மொழி. இரண்டாவது தாய்-தந்தை வசித்த இருப்பிடம். 3-வது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இதனுடைய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதோடு மத்திய சட்டமந்திரி தெளிவுபடுத்தி ஒரு வாய்ப்பையும் கொடுத்துள்ளார். விவரம் தெரிந்தால் சொல்லலாம், ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம் இது கட்டாயம் இல்லை என்று தெளிவுபடுத்திவிட்டார்.
ஏற்கனவே தி.மு.க. ஆட்சியின்போது என்ன கணக்கெடுப்பு எடுத்தார்களோ அதனைத்தான் மத்திய அரசு எடுக்க சொல்கிறது. சேர்க்கப்பட்ட 3 அம்சங்களையும் பொதுமக்கள் விருப்பப்பட்டால் சொல்லலாம். விருப்பம் இல்லை என்றால் சொல்ல வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்கள். இருந்தாலும் சிறுபான்மை மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து இவர்கள் பேசி, பேசி தவறான செய்தியை பரப்பி ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மாநில அரசை பொறுத்தவரை எந்த சிறுபான்மை மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.3½ லட்சம் கோடிக்கும் மேல் கடன் சுமை அதிகரித்துவிட்டதாகவும், வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?
பதில்:- தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கினார்களே அப்போது இவர்கள் என்ன வெள்ளை அறிக்கை வெளியிட்டனர்? தி.மு.க.. ஆட்சியில் இருந்து இறங்குகின்றபோது ரூ.1 லட்சம் கோடி கடன் என்று சொன்னால் இன்றைய பண மதிப்புக்கு கணக்கிட்டு பாருங்கள். எத்தனை மடங்கு விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்ல இவர்கள் வாங்கிய கடனுக்கு நாங்கள் தொடர்ந்து வட்டி கட்டிக்கொண்டு இருக்கிறோம். இவற்றையெல்லாம் சேர்க்கின்றபோது கடன் தொகை உயர்ந்துள்ளது.
பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதியை வாங்கி பயன்படுத்தியுள்ளோம். இதனால் கடன் தொகை உயர்ந்துள்ளது. தற்போதைய பண மதிப்பை ஒப்பிட்டுபார்த்தால்தான் இது அதிகமா? குறைவா? என்று தெரியும். 2011-ல் தி.மு.க. ஆட்சியில் ஒரு லட்சம் கோடி கடன் பெரிய தொகை. இன்று பணமதிப்பின் அடிப்படையில் ரூ.3½ லட்சம் கோடி சேர்த்தால் ரூ.4½ லட்சம் கோடியாகும். அவர்கள் வாங்கிய கடனுக்கும் வட்டி கட்டி வருகிறோம். இந்த அரசு சிறப்பான முறையில் நிர்வாகம் செய்து வருகிறது.
கேள்வி:- பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் குற்ற பெருக்கத்தை மறைக்கவும், 3 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்காமல் இப்போது பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளாரே?
பதில்:-ஒவ்வொரு ஆண்டும் ஒரு திட்டத்தை வெளியிடுவோம். அதன்படி இந்த ஆண்டு நாங்கள் அறிவித்துள்ளோம். இன்னும் 1 ஆண்டு 3 மாத காலம் உள்ளது. அதன் பின்னரும் இந்த ஆட்சி தொடரும். ஸ்டாலின் ஆட்சிக்கா வரப்போகிறார்? எப்போது பார்த்தாலும் முதல்-அமைச்சர் கனவில் அவர் உள்ளார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்கிறோம். மனமிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். அவரிடம் மனம் இல்லை. நல்ல நல்ல திட்டங்களை நாங்கள் அறிவிப்பதால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் எரிச்சலில் இருந்து வரும் வார்த்தைதான் அது.
கேள்வி:- இஸ்லாமியர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- கட்டுப்படுத்துவது கிடையாது. இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் போராட்டம் நடத்த உரிமை உண்டு. அந்த அடிப்படையில் ஜனநாயக நாட்டில் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்துகின்ற அரசாங்கம் என்னுடைய அரசாங்கம் அல்ல. அதனால்தான் எந்த போராட்டம் நடத்தினாலும் அனுமதி கொடுக்கின்ற அரசு எங்கள் அரசுதான். யாருக்கும் நாங்கள் தடை செய்வது இல்லை.
கேள்வி:- போராட்டத்தைதூண்டுபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்களா?
பதில்:- யார் போராடுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஊடகத்தை கடுமையாக விமர்சித்தார். எந்த ஊடகமும், பத்திரிகையும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆர்.எஸ்.பாரதி வாய் கூசுகின்ற வார்த்தையை கூறினார். கீழ்தரமான வார்த்தையை பயன்படுத்தினார். நாங்கள் நல்லநல்ல திட்டங்களை செய்கிறோம். அந்த திட்டங்களை எடுத்து கூறினால்தான் இப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற கருத்தை கூறமாட்டார்கள். இன்னொரு கருத்தையும் ஆர்.எஸ்.பாரதி சொல்லி உள்ளார். தி.மு.க. ஆட்சியில் இருக்கின்றபோதுதான் நிறையபேர் உயர்நீதிமன்ற நீதிபதியானார்கள். அது தி.மு.க. போட்ட பிச்சை என்று ஒரு தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆணவ கொழுப்பில் பேசியுள்ளார். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இப்படி விமர்சனம் செய்வது சரியா?.
கேள்வி:- கே.சி. பழனிசாமி அரசையும், முதல்-அமைச்சரையும் விமர்சித்துள்ளாரே?
பதில்:- அவர் கட்சியிலே கிடையாது. அவர் எவ்வளவு தவறு செய்துள்ளார்? எத்தனை முறை சிறைக்கு சென்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்டவரின் கருத்தையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி:- குடிமராமத்து என்ற பெயரில் அரசு கஜானாவை காலி செய்துவிட்டனர் என்று டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளாரே?
பதில்:- அவர் விவசாயி மீது அக்கறையில்லாதவர். நான் விவசாயி. ஒரு விவசாயி தமிழக முதல்-அமைச்சராக இருப்பதால் அவர்கள் படுகின்ற துன்பங்கள், துயரங்களை துடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் குடிமராமத்து என்ற திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். விவசாயிகளிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் டி.டி.வி. தினகரன், ஸ்டாலின் போன்றவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். உடலுக்கு உயிர் எப்படியோ அதுபோல் விவசாயிக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீரை கொடுப்பது அரசின் கடமை. அதனை நாங்கள் சரியான முறையில் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். பருவகாலங்களில் பெய்கின்ற மழை நீர் வீணாக போகாமல் குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்களை ஆழப்படுத்தி, தூர்வாரி மழைநீரை தேக்கி வைத்துகோடைகாலத்தில் நிலத்தடி நீர் உயருவதற்கும், குடிநீர் கிடைப்பதற்கும்தான் இந்த திட்டம். இது ஒரு அற்புதமான திட்டம். இதனை விவசாயிகள், பொதுமக்களும் பாராட்டியுள்ளனர். இந்த திட்டம் மக்களிடம் பிரசித்தி பெற்ற காரணத்தால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
கேள்வி:- தமிழக சட்டசபைக்கு முன்கூட்டிய தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளதா?
பதில்: அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை.
கேள்வி:- பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கான தமிழக அரசின் நடவடிக்கை எந்தநிலையில் உள்ளது?
பதில்: 7 பேர் விடுதலையை பொறுத்தவரை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் போட்டு அனுப்பி வைத்தார். என்னுடைய அரசு 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அமைச்சரவையை கூட்டி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளோம். கவர்னர்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். மாநில அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
முன்னதாக முதல்-அமைச்சருக்கு விமானநிலையத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஓ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரிவாசு, ஏ.கே.செல்வராஜ் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுசாமி, பா.வே. தாமோதரன், செ.தாமோதரன், முன்னாள் எம்.பி.க்கள் எம்.தியாகராஜன், யு.ஆர்.கிருஷ்ணன் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாந்திமதி, துணைத்தலைவர் அமுல்கந்தசாமி, கே.பி.ராஜு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்று எதிர்க்கட்சி தலைவர் 7 பேர் விடுதலை குறித்து பேசி வருகிறார். தி.மு.க. ஆட்சி இருக்கின்றபோது மறைந்த கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அமைச்சரவை கூடி, தீர்மானம் நிறைவேற்றினார்கள். அந்த தீர்மானத்தில் நளினி ஒருவரை மட்டும் விடுதலை செய்யலாம். மற்றவர்களுக்கு தண்டனை நிறைவேற்றலாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இன்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன். அப்போது அவரும் அமைச்சராக இருந்து இருக்கிறார். ஸடாலின் துணை முதல்-அமைச்சராக இருந்துள்ளார். இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் முடிவு எடுத்துள்ளனர். இப்போது 7 பேர்விடுதலை குறித்து கேட்பதற்கு எந்த தகுதியும் இவர்களுக்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.