மகா பிரத்தியங்கராதேவி கோவிலில் மிளகாய் சண்டியாகம்

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூர் கிராமத்தில் மகா பிரத்தியங்கராதேவி கோவிலில் மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.

Update: 2020-02-24 22:30 GMT
தாமரைக்குளம்,

அரியலூரை அடுத்த பொய்யாதநல்லூர் கிராமத்தில் மகா பிரத்தியங்கராதேவி கோவிலில் மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. இதையொட்டி மகா பிரத்தியங்கராதேவிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற மிளகாய் சண்டியாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய்கள் கொட்டப்பட்டன. அப்போது யாருக்கும் எந்த ஒரு நெடியும் ஏற்படவில்லை. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்