கன்னியாகுமரியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி
தேசிய அளவிலான கராத்தே போட்டி கன்னியாகுமரி பெரியார்நகர் சி.எஸ்.ஐ. ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி,
கராத்தே போட்டியின் தொடக்க விழாவுக்கு ஆசிய கராத்தே நடுவர் ராஜேஷ் அகர்வால் தலைமை தாங்கினார். ஆசிய கராத்தே நடுவர் எச்.ராஜ் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்பட பல மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இறுதியில் ஆந்திர மாநில அணி முதலிடத்தையும், தமிழக அணி 2-வது இடத்தையும் பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தமிழ்நாடு கராத்தே சங்க பொதுச்செயலாளர் ஈஸ்வர்குமார், ஆந்திர பிரதேச கராத்தே பயிற்சியாளர் எஸ்.வெங்கடேஸ்வரராவ், விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் ஆபிரகாம்லிங்கம், ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வர் ஸ்டாலின், ஞானதீபம் பள்ளி முதல்வர் ஐடா ஜான்சி ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை வேங்கை சிட்டோ ரியூ கராத்தே சங்கம், நாகர்கோவில் சிட்டி ரோட்டரி சங்கம் இணைந்து செய்திருந்தது.