பாபரின் பெயரில் மசூதி கட்ட சரத்பவார் விரும்புவது ஏன்? தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி

பாபரின் பெயரில் மசூதி கட்ட சரத்பவார் ஏன் விரும்புகிறார் என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2020-02-23 23:52 GMT
மும்பை,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் 15 பேரை உறுப்பினர்களாக கொண்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த 20-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது போல் அயோத்தியில் மசூதி கட்டுவதற்கும் மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என கூறினார்.

இது தொடர்பாக பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சரத்பவாரை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாபர் ஒரு படையெடுப் பாளர். தேசியவாத காங் கிரஸ் தலைவர் சரத்பவார், பாபரின் பெயரில் ஏன் மசூதி அமைக்க விரும்பு கிறார்?

முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்வதற்கு கட்டாயம் இடம் இருக்க வேண்டும். ஆனால் அது பாபரின் பெயரில் ஏன்?.

மசூதி கட்டுவதற்கு வக்பு குழு தான் உருவாக்கப்படும் என்பது சரத்பவாருக்கு தெரியும். ஆனால் ஏன் அறக்கட்டளை அமைக்க கோரினார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மேலும் செய்திகள்