அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-23 22:45 GMT
திருவள்ளூர்,

இந்த கூட்டத்தில், வருகிற 8-ந் தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தருவதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லோகநாயகி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம் உட்பட திரளான அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், திருவள்ளூர் அடுத்த பூந்தமல்லி ஒன்றியம் நேமம் ஊராட்சியில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், குத்தம்பாக்கம் ஊராட்சியில் ரூ.17 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்