அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
வேதாரண்யம் தொகுதி அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று, தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.;
வேதாரண்யம்,
வேதாரண்யத்தில் தி.மு.க. மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், மாவட்ட அவைத்தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், கவிஞர் மாசி, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
விளையாட்டு போட்டிகள்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அனைத்து ஊராட்சி, நகர வார்டுகளில் விளையாட்டு போட்டிகளை நடத்துவது, தி.மு.க.வில் இளைஞர்களை புதிதாக சேர்ப்பது, வேதாரண்யம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகளில் போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், ஊராட்சி மற்றும் நகர வார்டுகளில் இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணிக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்து பாசறை கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் வேதாரண்யம் சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அருள்சேகர் நன்றி கூறினார்.