கர்நாடகா மாநிலத்திலிருந்து லாரியில் கடத்தல்: ரூ.1 கோடி புகையிலைப்பொருட்கள் பறிமுதல் 7 பேரிடம் விசாரணை
ஊத்துக்கோட்டை அருகே கர்நாடகா மாநிலத்திலிருந்து லாரியில் கடத்தப்பட்டு வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை,
கர்நாடகா மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடுக்கு லாரியில் சிலர் குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், சத்தியவேடு இன்ஸ்பெக்டர் சீனிவாசுலு, நாகலாபுரம் இன்ஸ்பெக்டர் மத்தாச்சாரி உள்ளிட்ட போலீசார் நேற்று அதிகாலை ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள ஆந்திர மாநில பகுதியான தாசுகுப்பத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வேகமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்து பார்த்த போது, அதில், ரூ.1 கோடி மதிப்புள்ள பான்பராக், ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கத்தை சேர்ந்த முத்துகுமார் (வயது 50), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வெங்கடேசன் (35), தாசுக்குப்பத்தை சேர்ந்த ராஜூ (34), மாரிமுத்து (32), சத்தியவேடுவை சேர்ந்த வேலுசெட்டி (35), சதீஷ் (36), செந்தில்குமார் (35) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.