காரைக்கால் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

காரைக்கால் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-02-21 23:56 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பேரில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோரின் நடவடிக்கையின்பேரில் இந்திய உணவு கழகம் சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் 3 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள்திறக்கப்பட்டுள்ளது.

தென்னங்குடி நவீன அரிசி ஆலையில் நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்திய உணவு கழகத்தின் வட்டார மேலாளர் சந்திரமோகன், மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குனர் செந்தில்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாகமத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ்மாவட்டத்தில்நடந்து வரும் வளர்ச்சி பணிகளைகலெக்டர் அர்ஜூன் சர்மாஆய்வு செய்தார். காரைக்கால் பைபாஸ் சாலை அருகே ரூ.15 கோடியில்ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டுமான பணிகளைகலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள வெளிவிளையாட்டு அரங்க கட்டுமான பணிகள், திரு-பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அருகே மத்திய அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் மூலம் ரூ.2.65 கோடியில் குளம் மேம்படுத்தப்படும் பணி, சமுதாய கூடம் கட்டும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திட்டப்பணிகள் அனைத்தையும் அடுத்த மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்