பார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணி
தாமரைக்குளம் ஊராட்சியில் பார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணி தொடங்கியது.
அரியலூர்,
அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் தாமரைக்குளம் ஊராட்சியில் பார்த்தீனியம் செடிகளை அழிக்கும் பணி தொடங்கியது. இதற்கு ஊராட்சி தலைவர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் பழனிசாமி பார்த்தீனியம் செடிகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றை முற்றிலுமாக எப்படி அழிப்பது என்று விளக்கி பேசி, பணியை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் செல்வமணி, ராஜசேகர் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.