ஆற்காட்டில் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஆற்காடு அரசு மருத்துவமனை சார்பில் காசநோய் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காசநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஆற்காடு,
ஆற்காடு பஸ் நிலையம் கண்ணன் பூங்கா அருகே இருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட துணை இயக்குனர் (காசநோய்) பிரகாஷ்அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆற்காடு அரசு மருத்துவமனை டாக்டர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். பஸ் நிலையம், பஜார் வீதி வழியாக சென்ற ஊர்வலம் கலவை சாலையில் உள்ள அரசு மருத்துவமனை அருகே நிறைவு பெற்றது.
தொடர்ந்து மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிகிச்சை பிரிவு மேற்பார்வையாளர் பிரபாகரன், ஆய்வக மேற்பார்வையாளர் திலக், சுகாதார பணியாளர் வேல்முருகன் மற்றும் தனியார் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.