பஸ் பாஸ் வழங்கக்கோரி திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

பஸ் பாஸ் வழங்கக்கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-20 23:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புற பகுதிகளில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மாணவர்கள் பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை வழங்க கோரி திரு.வி.க. கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை நிர்வாகி மணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஹரி சுர்ஜித், நிர்வாகிகள் அபிமன்யூ, ஜெயசீலன், சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்