மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை தென்காசி கோர்ட்டு தீர்ப்பு

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-02-20 22:30 GMT
தென்காசி,

மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் வெள்ளாளங்குளம் அருந்ததியர் தெருவை சேர்ந்த சுப்பையா மனைவி முத்துராஜ் (வயது 51). இவர் துலுக்கர் குளம் பஞ்சாயத்து துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜமுனா என்ற காஞ்சனா (46).இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். முத்துராஜுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வருவார். மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்பார். அவர் தர மறுக்கும் போது அவருடன் தகராறு செய்து அவரை தாக்கியும் வந்துள்ளார். அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தாராம்.

 இந்த நிலையில் கடந்த 9–9– 2016 அன்று காலை 5 மணிக்கு மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டாராம். அவர் பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ் மனைவியை கண்டபடி திட்டி கொண்டு வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி ஜமுனாவின்கழுத்தை அறுத்து தலையை துண்டாக்கி கையில் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் படித்துக்கொண்டிருந்த அவரது மகள் கார்த்திகா (16) சத்தம் போட்டு அலறினாள். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து கார்த்திகா சீதபற்பநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜுவை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் முத்துராஜுவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்