குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற கோரி சிவகங்கையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஜமாத்துல் உலமா பேரவை சார்பில் நடைபெற்றது.;

Update: 2020-02-19 22:15 GMT
சிவகங்கை,

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், மாநில ஜமாத்துல் உலமா பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி சிவகங்கை கோர்ட்டு வாசலில் இருந்து பேரணியாக புறப்பட்டு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். மாவட்ட உலமா சபை தலைவர் முகமது ரிழா பாகவி தலைமை தாங்கினார்.

இதில் செயலாளர் இப்ராஹிம்பைஜி மற்றும் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர், ஜமாத் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி கலெக்டர்அலுவலக வாசலை அடைந்ததும், அங்கு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மங்களேஸ்வரன், முரளிதரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்