கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

Update: 2020-02-19 21:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

ஆட்டோ கவிழ்ந்து... 

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி கீழ காலனி அண்ணா நகரைச் சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 51). இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி, வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஆட்டோவில் கோவில்பட்டியில் சென்று பயணியை இறக்கி விட்டார். பின்னர் அவர், அங்கிருந்து ஆட்டோவில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

லிங்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்தது. அப்போது ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்த குழந்தைராஜின் மீது ஆட்டோ விழுந்து அமுக்கியது. இதில் தலைநசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை 

அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, நாலாட்டின்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த குழந்தைராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த குழந்தைராஜிக்கு மரிய பிரேமா (42) என்ற மனைவியும், டார்வின், மிக்கேல்ராணி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்