சுங்கவரி வசூலித்தல் ஏலம்
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் சுங்கவரி வசூலித்தல் ஏலம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர்,
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 2020–2021–ம் ஆண்டுக்கான சுங்கவரி வசூலித்தல், புளியமர மகசூல், தெருவிளக்கு உதிரிபாகங்கள், பழைய தினசரி நாளிதழ்கள் ஆகியவற்றுக்கான ஏலம் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் நடந்தது.
இதில் பலர் வைப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் கலந்துகொண்டனர். அப்போது ஒரு ஆண்டுக்கான சுங்கவரி வசூலித்தலுக்கான ஏலத்தில் கஜேந்திரன் என்பவர் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து ஏலம் எடுத்தார். கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஏலம் கிடைத்துள்ளதாக செயல் அலுவலர் தெரிவித்தார்.