தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2020-02-19 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அம்மா திட்ட முகாம் 

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அம்மா திட்ட முகாமை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தி வருகிறது. அதன்படி இந்த வாரத்துக்கான முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த முகாம் தூத்துக்குடி தாலுகா வடக்கு சிலுக்கன்பட்டி, ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆறாம்பண்ணை, திருச்செந்தூர் தாலுகா கானம், சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி, கோவில்பட்டி தாலுகா அய்யனேரி, விளாத்திகுளம் தாலுகா அயன்பொம்மையாபுரம், எட்டயபுரம் தாலுகா சுரைக்காய்பட்டி, ஓட்டப்பிடாரம் தாலுகா முத்துராமலிங்கபுரம், கயத்தாறு தாலுகா வடக்கு இலந்தைகுளம், ஏரல் தாலுகா பழையகாயல் ஆகிய கிராமங்களில் நடக்கிறது.

கோரிக்கைகள் 

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு–இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் வழங்கலாம். இந்த மனுக்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. ஆகையால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்