டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தடகள போட்டி தொடக்க விழா
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 27-வது ஆண்டு தடகள போட்டி தொடக்க விழா நேற்று காலையில் நடந்தது.
கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ் வரவேற்று பேசினார். நெல்லை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக உடற்கல்வி உதவி இயக்குனர் பொன்.சோலை பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தடகள போட்டிகளை தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டம், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல், 100 மீட்டர் ஓட்டம், மும்முறை தாவுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) போட்டிகள் நடைபெறும். மாணவர்களுக்கு 20 போட்டிகளும், மாணவிகளுக்கு 19 போட்டிகளும் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது.