உளுந்தூர்பேட்டை அருகே, விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், விவசாயி. இவரது மனைவி பஞ்சாமிர்தம்(வயது 62). இவர் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பஞ்சாமிர்தம் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் முருகன் கொடுத்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பஞ்சாமிர்தம் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.