நெல்லையில் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2020-02-18 22:30 GMT
நெல்லை, 

நெல்லையில் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கு காங்கிரஸ், த.மா.கா.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் உள்ள செல்லப்பாண்டியன் உருவச்சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, பொருளாளர்கள் முரளிராஜா, ராஜேஷ் முருகன், வாகை கணேசன், சொக்கலிங்ககுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா. 

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் செல்லப்பாண்டியன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் கடற்கரை, மாவட்ட செயலாளர் ஜான்சிராணி, மாநில செயற்குழு உறுப்பினர் மாரித்துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெரீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்