உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார்

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை விவரங்களை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று வெளியிட்டார்.

Update: 2020-02-18 23:00 GMT
தென்காசி, 

உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை விவரங்களை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று வெளியிட்டார்.

கலெக்டர் வெளியிட்டார் 

தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தின் கடிதத்தின்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன்கள், மாவட்ட பஞ்சாயத்துகள், நகர பஞ்சாயத்துக்கள், நகரசபைகள் ஆகியவற்றிற்கான வார்டுகள் மறு வரையறை பணிகள் நடைபெறுகிறது.

ஊரக உள்ளாட்சி, பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்கள் அடங்கிய அறிவிக்கைகளை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று வெளியிட்டார். அதனை தென்காசி வட்டார வளர்ச்சி அதிகாரி சண்முகசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

அப்போது உதவி இயக்குனர் (தணிக்கை) கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கிரேட் சர்ச்சில் ஜெபராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

நகரசபை வார்டு மறுவரையறை 

மேலும் நகரசபை வார்டு மறு வரையறை இறுதி புள்ளி விவரங்களை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டார். அதனை தென்காசி நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, நகரமைப்பு அலுவலர் பொன்னுச்சாமி, நகரமைப்பு ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்