சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற திருச்சி வீரருக்கு உற்சாக வரவேற்பு
சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருச்சியை சேர்ந்த அரவிந்த பிரகாஷ், 91 கிலோவிற்கு மேற்பட்ட பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.
நேற்று அவர் அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறேன். எனக்கு குத்துச்சண்டை போட்டிக்கான பயிற்சியை சர்வதேச பயிற்சியாளர் விஜயகுமார் அளித்தார். திருச்சி சாரதாஸ் நிறுவனத்தினர் எனக்கு உதவி செய்தனர். பயிற்சி அளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன், என்றார். பூடான், நேபாளம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் அரவிந்த பிரகாஷ் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளார். தேசிய அளவிலான ேபாட்டிகளில் 15 பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் 8 முறை வென்று பதக்கங்களை பெற்றுள்ளார். இதில் 3 தங்க பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங் களையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.