கோட்டூரில், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் - இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடந்தது
கோட்டூரில் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பஸ் நிறுத்தம் அருகில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் ஒன்றியக்குழு சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரி சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, ஒன்றிய செயலாளர் உஷா, ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமயந்தி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.