படகு பழுதானதால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளிப்பு
படகு பழுதானதால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்தனர். ஓட்டை விழுந்து தண்ணீர் புகுந்ததால் படகு தரை தட்டி நின்றது.
பாகூர்,
புதுவை மாநிலம் வீராம்பட்டினம் காந்தி வீதியை சேர்ந்தவர் ஜெயராஜா. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த கந்தன், சங்கர் உள்பட 5 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகின் அடிப்பகுதியில் ஓட்டை விழுந்து கடல்நீர் புகுந்தது. இதை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த ஓட்டையை அடைக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து கடல்நீர் படகுக்குள் புகுந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் நடுக்கடலில் அவர்கள் தத்தளித்தனர்.
இதையடுத்து கடலில் இருந்து கரை திரும்ப முடிவு செய்து வீராம்பட்டினம் நோக்கி பழுதான படகுடன் திரும்பி வந்துகொண்டிருந்தனர். ஆனால் அதிகளவு தண்ணீர் புகுந்ததால் படகு மெல்ல மெல்ல மூழ்கத் தொடங்கியது. நேற்று காலை மூர்த்திக்குப்பம் கடற்கரை பகுதியில் வந்தபோது படகு தரை தட்டி நின்றது.
இதையடுத்து மீனவர்கள் கடலில் குதித்து, நீந்தி கரை ஏறினர். படகில் ஏற்பட்ட பழுதால் அதன் அடிப்பகுதி மற்றும் என்ஜின் சேதமடைந்தது.
தரை தட்டிய படகை மீட்டு துறைமுகத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.