புளியங்குடி அருகே மினிலாரி– மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

புளியங்குடி அருகே மினிலாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2020-02-15 22:30 GMT
புளியங்குடி, 

புளியங்குடி அருகே மினிலாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

வாலிபர் 

தென்காசி மாவட்டம் சிவகிரி அண்ணா வடக்கு வீதியை சேர்ந்த கருணாநிதி என்பவருடைய மகன் ராசுக்குட்டி (வயது 26). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று சிவகிரியில் இருந்து கடையநல்லூருக்கு வேலை வி‌ஷயமாக மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு ஊர் திரும்பி சென்று கொண்டிருந்தார்.

புளியங்குடி அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கு பாலம் வளைவில் வந்தபோது மதுரையில் இருந்து தென்காசி நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ராசுக்குட்டி படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு 

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் ராசுக்குட்டி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து தொடர்பாக புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப்பதிவு செய்து, மினிலாரி டிரைவர் மதுரை பைக்காரா நகரை சேர்ந்த திருமேனி (56) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மினிலாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்