அரக்கோணத்தில், டிரைவர் மீது தாக்குதல்
அரக்கோணத்தில் டிரைவர் இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
அரக்கோணம்,
அரக்கோணம், ஜோதிநகர் பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 35), டிரைவர். இவர், அரக்கோணம் - திருத்தணி சாலையில் உள்ள கடையின் முன்பாக நின்று கொண்டு நண்பருடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென டில்லிபாபுவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.