மத உணர்வை புண்படுத்தியதாக நடிகை ரவீனா தாண்டன் மீது வழக்குப்பதிவு

மத உணர்வை புண்படுத்தியதாக இந்தி நடிகை ரவீனா தாண்டன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2020-02-10 00:04 GMT
நாக்பூர்,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி அன்று தனியார் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகை ரவீனா தாண்டன், சினிமா இயக்குனர் பாராகான், டி.வி. நடிகர் பார்தி சிங் ஆகியோர் ஒரு மதசொல்லை குறிப்பிட்டு கேலி செய்தனர். இதனால் சர்ச்சை உண்டானது. இதையடுத்து அவர்கள் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் இதை செய்யவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டனர்.

இந்தநிலையில், ஒரு சமூகத்தின் மத உணர்வை 3 பேரும் புண்படுத்தி விட்டதாக நாக்பூர் கோரேகாவாடை பகுதியை சேர்ந்த குஷ்பு பக்வான் பவார்(வயது27) என்பவர் அங்குள்ள மன்காபூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.

அந்த புகார் தொடர்பாக போலீசார் நடிகை ரவீனா தாண்டன், இயக்குனர் பாராகான், டி.வி. நடிகர் பார்தி சிங் ஆகிய 3 பேர் மீதும் மத உணர்வை புண்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டி 3 பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்