ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவர் காவல் படையில் உள்ள 8 மற்றும் 9–ம் வகுப்புகளை சேர்ந்த 44 மாணவர்கள் நேற்று ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.

Update: 2020-02-08 22:00 GMT
ராணிப்பேட்டை, 

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, கணினி அறை உள்பட பலவற்றை பார்வையிட்டனர். அங்கு பணியில் இருந்த போலீசார், காவல்துறையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினர்.

பின்னர் பள்ளி மாணவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், போலீஸ் துறை மற்றும் தனிப்பிரிவு போலீசாரின் பணிகள், செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார்.

பள்ளி மாணவர்களுடன் பள்ளியின் மாணவர் காவல் படை பொறுப்பாளர்கள் காதர்செரீப், சபீர்அகமது உள்பட போலீசார் உடன் இருந்தனர்.

பின்னர் மாணவர்கள் ராணிப்பேட்டையில் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தையும், நீதிமன்றத்தையும், ஆற்காட்டில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு சென்றும் பார்வையிட்டனர்.

ஆற்காடு தீயணைப்பு நிலையத்தில் தீத்தடுப்பு மற்றும் தீயை அணைக்கும் முறைகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தனர்.

மேலும் செய்திகள்