காடை வளர்ப்பு பயிற்சி முகாம்; 11–ந் தேதி நடக்கிறது
திருவண்ணாமலையில் காடை வளர்ப்பு பயிற்சி முகாம் 11–ந் தேதி நடக்கிறது.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை புறவழிசாலையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வருகிற 11–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.
இந்த பயிற்சி முகாமிற்கு முதலில் முன்பதிவு செய்யும் 50 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தலைவர் தியோபிளஸ்அனந்த்குமார் தெரிவித்து உள்ளார்.