வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மின்இணைப்பு பெட்டி மாற்று இடத்தில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரம் வேதாசலம் நகரில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மின்இணைப்பு பெட்டி மாற்று இடத்தில் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகர்பகுதி முழுவதும் மின் கம்பங்கள் அகற்றப்பட்டு தரை வழி வயர் புதைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க தெருக்கள் தோறும் சாலை ஓரங்களில் மின் இணைப்பு பெட்டிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாமல்லபுரம் வேதாசலம் நகரில் உள்ள 3-வது குறுக்கு தெருவில் மின் இணைப்பு பெட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் 10 அடி அகலத்தில் குறுகிய இடமே உள்ள இந்த தெருவின் முனையில் அமைக்கப்பட்ட மின் இணைப்பு பெட்டி சாலையை ஆக்கிரமித்து அமைப்பட்டுள்ளள்ளது. இதனால் இந்த வழியாக கார், ஆட்டோக்கள் செல்ல தடையாக உள்ளது. அதேபோல் இரவு நேரங்களில் உடல் நிலை சரியல்லாதவர்களை அழைத்து செல்ல வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த சாலையில் உள்ள மின் இணைப்பு பெட்டியால் தெருவில் செல்லமுடியவில்லை.
இதனால் சாலையின் நடுவில் அமைக்கப்பட்ட இந்த மின் இணைப்பு பெட்டியை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று மாமல்லபுரம் வேதாசலம் நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.